Skip to main content

*நினைத்தாலும்* *நிறுத்த முடியுமா, என்ன?*

🏃எதற்காக இந்த ஓட்டம் ?

🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿


*எல்லோரும் அதிவேகமாக*

*ஓடுகிறார்கள்.*

*நவீனம் நடத்தும்* *பொருளாதார பந்தயத்தில்*

*ஓடுவதற்கு தடங்கலாக* *இருந்த சொந்த ஊர்களை உதறித்* *தள்ளி விட்டு*

*வேகமாக ஓடினார்கள்..*


*பந்தயம் கடினமாக இருந்த போது*

*வேகத்தை மேலும் கூட்ட* *தாய்மொழி தடையாக* *இருக்கவே அதையும்* *ஒதுக்கிவைத்து*

*ஓடினார்கள்..*

*பின்னர் தர்மசிந்தனைகள்,*

*கடமை, கண்ணியம் கூட* *சுமைகளாகிப் போயின..*


*எனவே அவை*

*அனைத்தையும் உதறித்*

*தள்ளிவிட்டு ஓட்டத்தைத்*

*தொடர்ந்தனர்..*


*உறவுகள் சுமையாக* *தொந்தரவாக* *அவர்களுக்குத்* *தோன்றின..*

*எனவே அவற்றையும்* *விட்டுத் தள்ளினார்கள்* *அல்லது வில(க்)கி* *ஓடினார்கள்..*


*இந்த நவீன மனிதர்களுக்குப்* *பொருளாதார வசதி* புகழ் * * *வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத* *வெறி மட்டுமே எஞ்சி*

*உள்ளதால்*

*பந்தயத்தில் வேக வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள்..*

*இனி அவர்கள் வீசி எறிய*

*எதுவுமில்லை!..*


*குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன...*

*மடிக்கணினித் திரை* *வழியாக* *பேரப்பிள்ளைகளைக்* *கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்!...*


*பிறந்த குழந்தையின்* *பசிக்கு பாலூட்டவும்* *குளிப்பாட்டவும் * *நேரம் இல்லாத*

*இளம் அம்மாக்களும்* *உருவாகிவிட்டார்கள்..*


*மனைவி வலியால்* *துடித்தாலும்* *அரவணைத்து மருந்து* *கொடுத்து அக்கறையும் பாசமும் காட்ட நேரம் இல்லாத* *

*கணவர்களும் மலிந்து* *போனார்கள்...*


*என்றாலும் எல்லோரும்* *ஒடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!*


*பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது..*

*சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது*..


*மருத்துவச் செலவுக்கு* *அனுப்பும் பணம் கூட  அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன..*

*மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் முடிவதில்லை...*


*எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்களும் கேளிக்கைகளும் செல்போன்களும் விழுங்கிவிட்டன..*

*தொடு திரையில் வாழ்த்துக்கள்*

*நகரங்கள் விரிவடைய*

*மனித மாண்பு வெகுவாகச் சுருங்கி விட்டது.*

*மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் மழலைக் காப்பகங்களுக்கும்* *ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றனர்..*


*இவர்கள் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாக தென்படுகின்றது !..*


*தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின..*

*இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள்* *தனித்தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள்..*


*இனி சொல்வதற்கு ஒன்றுமில்லையே!*

*மனித இனம் நிம்மதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து* *ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது..*

*இனி அதுவே* *நினைத்தாலும்*

*நிறுத்த முடியுமா, என்ன?*


🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿

Comments

Popular posts from this blog

Air India comedy

....என்ன சித்தப்பா, நடந்து வர்றீங்க...? வண்டி எங்கே..? === கொஞ்சம் பண பிரச்சினை. அதான் வண்டியை வித்துட்டேன். .... பரவாயில்ல விடுங்க. அரசாங்கமே செலவுக்கு பணம் இல்லாம ஏரோபிளென், இரயில் என ஒவ்வொன்றாக வித்துகிட்டு இருக்கு. அதுக்கு நீங்க பரவாயில்லை. 😄😄😄😄

ஊழியம் என்பது....

"ஊழியம் என்பது போர்க்களத்தின் முன்னணியில் நிற்கும் ஓர் அனுபவமாகும். எந்தவொரு போரிலும் நடப்பதுபோல முன்னணியில் பல மரணங்களும் பெருங்காயங்களும் ஏற்படும். ஆவிக்குரிய போராட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல." - பால் மார்ஷ் மல்கானி எழுதிய *'ஒரு தலைவர் உருவாகிறார்'* என்னும் நூலிலிருந்து.

BARNABAS

BARNABAS Barnabas is another one of my heroes. His name means ‘Son of encouragement’ [consolation, comfort, exhortation]. *Encouragement* = _*paraklesis*_ in Greek. _Paraklesis_ is what a _parakleton_ does. _Parakleton_ is the Greek word used by Jesus to describe the Holy Spirit as a Comforter.  In other words, the fellow-Christians called Barnabas – the son of the Comforter – *because his life was so completely transformed by the work of the Holy Spirit* that he was always looking to strengthen, support n encourage people. *Barnabas had learnt to deny himself, and walk in step with the Spirit*. In these accounts we can see a reflection of Jesus in him: ♥ *Caring heart*: Barnabas [aka Joseph] was among the first to sell his land and give the money to the apostles for them to use to meet the needs within the community. [Acts 4:36-37] 🔸In an era where people were sold into slavery to pay off debts – this meant that he was purchasing freedom for people. He was mirroring what ...