*“யார் பெரியவன்!”.*
ஒருநாள் நமது கையில் உள்ள ஐந்து விரல்களுக்கும் வாக்கு வாதம் உண்டாயிற்று. ஐந்து விரல்களும் தங்களைக் குறித்து மேன்மை பாராட்ட தொடங்கிற்று. ஒவ்வொரு விரலும் நான் தான் பெரியவன் என்று வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தது.
*கட்டைவிரல்..*
அப்போது கட்டைவிரல் தன்னுடைய மேன்மையை இப்படிச் சொல்லிற்று. நான் தான் பெரியவன் ஏனென்றால் என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
உதாரணமாக ஒரு பொருளை கையால் தூக்கி வேண்டுமென்றால் நீங்கள் நான்கு பேரும் அதை தூக்கினாலும் கட்டைவிரலாகிய நான் அதை தாங்கி பிடிக்காவிட்டால் உங்களால் ஒன்றும் தூக்கவே முடியாது.
ஆகவே என்னுடைய பெலன் மிகவும் அதிகம் உருவத்திலும் நான் குள்ளமாக இருந்தாலும் பருமனாய் இருநக்கிறேன். நீங்கள் என் பக்கத்தில் கூட இருக்க தகுதியில்லை. அதை நீங்கள் உள்ளங்கையின் அமைப்பிலேயே இருக்கிறேன்.
ஆகையால் நான் எனக்கும் உங்கள் நால்வருக்கும் மத்தியிலே இடைவெளி அதிகமாக இருப்பதை பார்க்கலாம் ஆகவே நீங்கள் என் பக்கத்தில் கூட இருக்க தகுதி இல்லை என்று கட்டைவிரல் ஜம்பம்அடித்து வாதாடிற்று.
*ஆள்காட்டி விரல்...*
ஆள்காட்டி விரல் மிகவும் பெருமையுடன் தன்னுடைய மேன்மையை இப்படிச் சொல்லிற்று. ..
மனிதர்கள் ஒரு முக்கியமான காரியத்திற்காக என்னை உபயோகப்படுத்துவார்கள் தெரியாத ஒரு ஆளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றாலும் தெரியாத வீட்டை காட்ட வேண்டும் என்றாலும் தெரியாத ஒரு வழியை காட்ட வேண்டும் என்றாலும் என்னை தான் பொதுவாக உபயோகப்படுத்துவார்கள்.
இது எனக்கு ஒரு பெரிய பெருமை
அதைவிட எனக்கிருக்கும் ஒரு பெரிய பெருமை என்னவென்றால் எவ்வளவு பெரிய பரிசுத்தவான்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட மற்ற நான்கு விரல்களை மடக்கி என்னை மாத்திரம் நீட்டிச் சுட்டிக் காட்டுவார்கள்
அது மாத்திரமா எவ்ளோ பெரிய ஆவிக்குரிய சபையாய் இருந்தாலும் சரி அதிலும் மனிதர்கள் குறைகளை கண்டுபிடித்து அந்த குறைகளை சுட்டிக்காட்டி பேச அந்த சபைகளை சுட்டிக் காட்டிப் பேச உங்கள் யாரையும் மனிதர்கள் உபயோகப் படுத்த மாட்டார்கள் என்னைத்தான் உபயோகப்படுத்துவார்கள். யாரையாவது மிரட்டி பணிய வைப்பதற்கும் என்னைத்தான் ஆட்டி கோ ப்பட்டு பேசுவார்கள்.
ஆகவே நான் தான் பெரியவன் என்றது
*நடுவிரல்*
பிறகு நடுவிரல் தன்னுடைய பெருமையை இப்படி சொல்லிற்று. நீங்கள் எல்லாம் ஏன் வீணாக வாதாடுகிறீர்கள்?
எல்லோரும் வரிசையாக நிற்கபோம் இப்பொழுது பாருங்கள் யார் உயரமாய் இருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள் நான் தான் உயரத்தில் பெரியவன் என் தலைதான் உயர்ந்திருக்கிறது அது மாத்திரமா உங்களுக்கு மத்தியிலே நான் இருக்கிறேன்.
எனது வலது பக்கத்தில் இரண்டு விரல் காவலாளிகள் போலும் எனது இரண்டு
பக்கத்தில் இரண்டு விரல் காவலாளிகள் போல் காணப்பட ஒரு ராஜாவைப் போல் கனத்துக்குரிய ஒரு விரலாய் நான் இருக்கிறேன்
ஆகவே நான்தான் உங்களெல்லாரிலும் பெரியவன் என்று பெருமையாய் சொல்லிற்று.
*மோதிரவிரல்...*
அடுத்ததாக மோதிரவிரல் மிகவும் பெருமையுடன் இப்படி சொல்லிற்று. ஏன் நீங்களெல்லாரும் வீணாக வாதாடாதீர்கள்? எனக்குப் பெயரே மோதிரவிரல் என்று பெயர்.
மோதிரம் போடும் அளவிற்கு பணம் இல்லாவிட்டாலும் கூட என் பெயரை மோதிரவிரல் என்று எல்லோரும் சொல்வார்கள் தங்கள் விலையேறப்பெற்ற கற்கள் பதித்து மோதிரத்தை போடுவதற்கு என்னைத் தேடுவார்கள்.
உங்கள் எல்லாரிலும் நான் தான் விலையேறப்பெற்றவன் கனத்திற்குாியவன் என்று பெருமையாய் சொல்லிற்று. ஆகவே நீங்கள் எல்லாரும் என்னை விட சிறியவர்கள் தான் அற்பமானவர்கள் தான்.
*சுண்டுவிரல்..*
கடைசியாக சுண்டுவிரல் பேச வேண்டிய நேரம் வந்தது அதற்குப் பெயரே சுண்டுவிரல் கடைசி விரலாயும் இருக்கிறது அதை மேன்மை பாராட்ட எதைச் சொல்லமுடியும்?
சிந்தித்து கடைசியாக மிகத் தாழ்மையுடன் இப்படிக் கூறிற்று. என்னுடைய பெயரே சுண்டு விரல் சுண்டைக்காய் விரல் என்று மனிதர்கள் கூறுவார்கள் அளவில் நான் சிறியவன்தான் வரிசையில் கடைசியானவன்.
உங்களைப் போல் நான் மேன்மை பாராட்ட என்னிடத்தில் ஒரு நன்மையும் கிடையாது ஆனால் உங்களுக்கு இல்லாத இரண்டு அனுபவங்கள் எனக்கு உண்டு அது என்னவென்றால் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை படிக்க பெற்றோர் அனுமதிக்கின்றார்கள்.
ஆரம்ப வகுப்பில் முதல் தடவையாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார் ஆசிரியர் முதல்முறையாக பிள்ளைகளுக்கு ஒன்று இரண்டு மூன்று என்று 5 வரை எண்களை சொல்லிக்கொடுக்கிறார்கள்.
அப்படி சொல்லிக் கொடுக்கும்போது ஒன்று என்று சொல்லும் போது மற்ற நான்கு விரல்களையும் மடக்கி வைத்துக் கொண்டு என்னை தான் நிமிர்த்தி காட்டுகிறார் ஆசிரியர் நீங்கள் நான்கு பேரும் அந்த சமயத்தில் எனக்கு கீழ் இருக்கிறீர்கள்
ஆகவே குழந்தைகளுக்கு கணித ஞானத்தைப் போதிக்கும் இதன் முதலாவது உயர்த்திக் காட்ட உபயோகபடுத்துகிறார்கள்.
ஆசிரியர்கள் அது மட்டுமல்ல உங்கள் எல்லோருக்கும் இல்லாத ஒரு பெரிய சிலாக்கியம் எனக்கு இருக்கிறது
அது என்னவென்றால் ஜெபம் பண்ண ஆலயத்தில் வந்து முழங்காலில் நிற்க கிறிஸ்தவர்கள் அவர்கள் தங்கள் இரு கரங்களையும் தேவ சமூகத்திற்கு நேராய் ஏறெடுக்கும்போது சுண்டுவிரல்களான நாங்கள் இருவருமே முதலாவது இருக்கிறோம்
எங்களுக்கு பின்னால் தான் மற்றவா்களாகிய நீங்கள் இருவர் இருவராகச் சேர்ந்து நிற்பீர்கள். ஆகவே கர்த்தருக்கு முன்பாக மனிதர்கள் ஜெபிக்கும்போது முதலாவது நிற்கும் பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள் தான் மனிதர்களை சுண்டுவிரல் என்று அற்பமாக எண்ணினாலும் கர்த்தருக்கு முன்பாக முதல்வராய் நாங்கள் நிற்கிறோம் அதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
என்அன்பு வாசகரே,
யார் பெரியவன் நீயா நானா என்ற போட்டாபோட்டி வருகிறதோ அப்போதே நாம் ஒற்றுமையை இழந்து விடுகிறோம். எதையும் சாதிக்க முடியாதவர்களாகி விடுகிறோம். ஏனென்றால் இப்படிப்பட்டவர்களிடத்தில்
தேவசிந்தையோ, நல்ல எண்ணங்களோ இருக்காது. அவர்கள் மாம்சீக மனுஷர்களாகி மாம்ச கிரியைகளை வெளிப்படுத்தி விடுவார்கள். எனவே தாழ்மையோடு காணப்படுவோம்.
*இயேசு சீஷர்களுக்கு கற்பித்த பாடம் :*
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும் போது, அவர்களை நோக்கி, நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்,
ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து, எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லிக் கொடுத்தார்.
*• (மாற்கு 9:33-35).*
அவர்களுக்கு மட்டுமல்ல நமக்குர் சேர்த்து தான் கற்றுக்கொடுக்கிறார். அவர கற்றுக்கொடுத்த வழியில் நடப்போம்..
🙏🏻🎀🙏🏻
Comments
Post a Comment