Skip to main content

ஏமாற்றாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை !



*“சிறந்த வாழ்க்கை!”.*

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. சண்முகம்செட்டியார் என்பவர்  பள்ளிக்கூடம் ஒன்றில் கணக்கு  வாத்தியாராகப் பணி செய்து கொண்டிருந்தார். அத்துடன் தமிழ் அறிவும் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியம்வரை புரட்டி எடுத்து விடுவார்.

அதிகாலையில் எழுந்தவர், காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு, ஆச்சி போட்டுக்கொடுத்த சீனூஸ் ஃபில்டர் காப்பியைச் சாப்பிட்டு விட்டு, அன்றைய நாளிதழில் மூழ்கியிருந்தார்.

ஆச்சி வந்து தோள்களைத் தொட்டவுடன்தான் தன்னிலைக்கு வந்து நிமிர்ந்து பார்த்தார்.

”எண்ணெய் தீர்ந்து போச்சு, சானா ஊரணி செக்கடிக்குப் போயி எண்ணெய் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னதோடு, ஒரு தூக்குப் பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்தார்.

“நான் போகமுடியாது. வேணும்னா நீ போய் வாங்கிக்கிட்டு வா”

“ஏன் போக முடியாது? பக்கத்திலதானே இருக்கு”

”எங்க பள்ளிக்கூடத்துப் பயலுக எவனாவது பார்த்தான்னா நாளைக்கே ஒரு புது பட்டப்பெயரை வைத்துவிடுவான்கள்!”

”இப்பவே உங்களுக்குப் பள்ளிக்கூடத்தில நாலு பெயர் இருக்காம்ல. அதோட ஒன்னு கூடுனா தப்பில்லை. போய் வாங்கிட்டு வாங்க! வாங்கிட்டு வந்தாத்தான் பூரி மசால். உங்களுக்குப் பிரியமான பலகாரம்.
இல்லைன்னா கோதுமை  தோசையும் தக்காளி சட்னியும் தான். யோசித்து முடிவு பண்ணுங்க!”

சொல்லிவிட்டு ஆச்சி வளவு நடைக்குள் போய்விட்டார்கள்.

வேண்டா வெறுப்பாக கிளம்பிய செட்டியார், பத்து நிமிட நடையில் செக்கடிக்கு வந்து சேர்ந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பூரி மசால்ன்னா ருசித்துச் சாப்பிடலாம். சாப்பிட்டுவிட்டு ஆசை தீர பகலில் ஒரு மணி நேரமாவது நிம்மிதியா தூங்கலாம்!

அவர் அங்கே வந்தபோது செக்கின் உரிமையாளர் உலகநாதன் செக்கில் அரைத்துக்கொண்டிருந்தார்.

இவரைப் பார்த்தவுடன். அந்த வேலையை விட்டுவிட்டு, முன்புறம் இருந்த அறைக்கு வந்தார். அதை அறை என்று சொல்ல முடியாது. 10 x 6 ல் கூறை வேய்ந்த இடம். ஒரு நீண்ட பெஞ்ச்.

அதன் மீது எவர்சில்வரிலான
எண்ணெய் டிரம். மற்றும் சிறிய கல்லாப்பெட்டி. முன்புறம் மூங்கில் தட்டியிலான தடுப்பு.

”என்ன அப்பச்சி வேண்டும்?” என்று கேட்டார்

“இந்தப் பாத்திரம் என்ன அளவு பிடிக்குமோ அந்த அளவு எண்ணெய் ஊற்றப்பா” என்றார்

“நான்கு லிட்டர் பிடிக்கும் அப்பச்சி” என்று சொல்லிக்கொண்டே, கனத்த குரலில்,கையைத் தட்டியவாறு ”இந்தா...இந்தா... ஓடுறா” என்று குரல் கொடுத்தார்

உடனே ஜல் ஜல் என்ற சலங்கை ஒலியுடன் உட்புறம் மாடு ஓடும் சத்தம் கேட்டது.

செட்டியார் ஆரவத்துடன் கேட்டார்: “இப்போது என்ன செய்தாய்? உள்ளே மாடு ஓடும் சத்தம் கேட்கிறதே?”

”அப்பச்சி, மாட்டை வைத்து எண்ணெய் ஆட்டும் வேலையை நான்தான் செய்ய வேண்டும். அதே போல இங்கே வியாபாரத்தையும் நானேதான் கவனிக்க வேண்டும். தனித்தனியாக ஆட்களைப் போடுவதற்கெல்லாம் வசதி பத்தாது.

ஆகவே இரண்டு வேலைகளையும் நானேதான் செய்கிறேன். நான் இங்கே வந்தால் மாடு நின்று விடும். அதனால் குரல் கொடுத்தால், நான் இருப்பதாக நினைத்துக்கொண்டு மாடு ஒட்டம் எடுக்கும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளும் நடக்கும்”

“மாடு ஓடுகிறது என்று எப்படித் தெரியும்?”

”அதுதான் அதன் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டியிருக்கிறேனே. அந்த சத்தத்தில் இருந்து தெரியும்”

”கெட்டிக்காரனப்பா நீ...உன்னைப்போல எல்லோரும் பாடுபட்டால், இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானாக மாறிவிடும்”  என்று பாராட்டியவர்,

அவனிடம் எண்ணையை வாங்கிக்கொண்டு அதற்கு உரிய காசையும் கொடுத்துவிட்டுத் திரும்பி வீட்டை நோக்கி நடக்க எத்தனித்தார்.

அவன் காசை வாங்கி எண்ணிச் சரிபார்த்துக் கல்லாப்பெட்டியில் போட்டு விட்டு, படலின் கதவைத் திறந்து கொண்டு, செக்கு இருக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றான்.

அதற்குள் சட்டென்று திரும்பி வந்த செட்டியார், அவனிடம் சொன்னார்: “உலகநாதா, ஒரு சந்தேகம் கெட்கலாமா?” என்றவர்
தொடர்ந்து கேட்டார்:

“மாடு ஓடினாலும் மணிச் சத்தம் கேட்கும். நின்று கொண்டே கழுத்தை ஆட்டினாலும் மணிச் சத்தம் கேட்கும். மாடு ஓட்டம் எடுக்காமல் நின்று கொண்டே கழுத்தை அசைத்து, ஓசை எழுப்பி, உன்னை ஏமாற்றினால், அது
உனக்கு எப்படித் தெரியும்?”

வகுப்பில் ஏமாற்று வேலை செய்யும் பல பையன்களைப் பார்த்த அனுபவத்தில் அவர் அப்படிக் கேட்டார்

“மாடு அப்படி எல்லாம் செய்யாது அப்பச்சி!” என்று அவன் பதில் உரைத்தான். இவர் விடவில்லை.

தொடர்ந்து கேட்டார்

“செய்யாது என்று எப்படிச் சொல்கிறாய்?”

“இல்லை அப்பச்சி. மாடுகளோடு எனக்கு 20 வருஷ பழக்கம் உண்டு. அவைகள் அப்படிச் செய்யாது!”

“அதைத்தான் எப்படி என்று கேட்கிறேன்”

”மாடு உங்களைப் போல படிக்கவில்லை. படித்தால்தான் புத்தி அந்தமாதிரி கோண வேலைகளைச் செய்யும். அதானால்தான் சொல்கிறேன்”

செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு செட்டியார் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்
என்அன்பு வாசகரே,   
வேதம் இப்படி சொல்கிறது ..                     
மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும், இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். - (ஏசாயா 1:3).

எவ்வளவு படித்திருந்தாலும் தன் வேலையில் மிக கவனமாக கர்த்தர் தந்த வேலை என்று உண்மையும் உத்தமுமாக வேலை செய்ய வேண்டும். உங்களால் முதலாளி ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்தவன் என்றால் உண்மையுள்ளவன். அன்புள்ளவன், தனக்கு நஷ்டம் வந்தாலும் அடுத்தவர்களை ஏமாற்றாதவன் என்ற  சாட்சியுள்ளவர்களாய்  வேலை செய்தலேயாகும்.

அப்போது கர்த்தர் உங்கள்  காரியங்களை வாய்க்கப்பண்ணி  உங்கள் பேரை பெருமைப்படுத்துவார்.

உதாரணமாக ,
யோசேப்பை சொல்லலாம்..

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான். அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது.

*• (ஆதியாகமம் 39: 2-5).*

ஏமாற்றாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை !
குடும்பத்திலும், சபையிலும்,சமுதாயத்திலும் யாரையுமே ஏமாற்றமல் வாழுதலே சிறந்த வாழ்க்கையாகும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல வாழ்க்கை வாழ தேவன் உங்களுக்கு கிருபை செய்வாராக !

இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாய்
அமைவதாக!!!

🙏🏻🎀🙏🏻

Comments

Popular posts from this blog

Thank God everyday for what we have!

🍁A repost from someone worth reflecting on: The beginning of 2020 has revealed enough for deep reflection: That giant Australia is not at all invincible from fire… That mighty China could be shaken by enemies that are too small to be seen… That what we view as small is a fully destructive Volcano… That what we see as a basketball star could fall into a deadly crash… Things are, indeed… never too big nor too small… never too high nor too low… never too powerful nor too faint… never too wealthy nor too broke… never too famous nor too ordinary… Whatever our condition is, … we are all equal… the rain falls on the just and the unjust... the sun rises on the evil and the good... we are all important… we are all gifts… our current status does not define us at all… what we have or possess is never a mighty protective armor… So, in life… don’t be rude… don’t be greedy… don’t be selfish… don’t be ill-mannered… don’t be crabby… don’t be wicked… don't be unemp...

Importance For Investor / Traders in Stock Broker/Exchange on Trades

  Dear Investor, With reference to SEBI circular ref no. CIR/MIRSD/15/2011dated August 02, 2011, a SMS and email facility has been provided for ease and convenience of verification of trades. The data is being provided to the clients on an "as is" and "where-is" basis, without any warranty. The Exchange shall not be liable for any delay or any other interruption which may occur in providing the data due to any reason including network (Internet) reasons or snags in the system, break down of the system or any other equipment, server breakdown, maintenance shutdown, breakdown of communication services or inability of the Exchange to send the data. In no event shall the Exchange be liable for any damages, including without limitation direct or indirect, special, incidental, or consequential damages, losses or expenses arising in connection with the data provided by the Exchange through this facility. Dos and Don’ts for Retail Investors Deal only with registered interme...

All Animals Picture