Skip to main content

Posts

Showing posts from June, 2020

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

அன்னை தெராசாவைப் பற்றி கிரிக்கெட் வீரர் சித்து பகிர்ந்துக்கொண்ட சாட்சியை வாசியுங்கள்.

1991-92ம் வருடங்களில், ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு ஊதியமாக எங்களுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படுவது வழக்கம். ஒருமுறை கல்கத்தாவில் நடந்த ஒரு போட்டியின்போது அப்படி எனக்குக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு, அன்னை தெரசாவைக் கட்டாயம் சந்திக்கவேண்டும்.. அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்காக அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தேயாகவேண்டும்” என்று எனக்குள் ஓர் உந்துதல் ஏற்பட்டு, அவ்வாறே அவரது ஆசிரமத்துக்குச் சென்றேன். “Sisters of Charity” என்ற அந்த அலுவலகம் மிகச்சிறியதாய் இருந்தது. அங்கே இருந்த கன்னியாஸ்திரிகளிடம் ‘Where is Mother?’ என்று கேட்டேன். அதற்கு அங்கே இருந்த ஒரு கன்னியாஸ்திரி, ‘Mother is at the ‘Home for the dying’ என்றார். எனக்கு ‘Home for the dying’ என்று அவர் கூறியதன் பொருள் விளங்கவில்லை. அவர்கள் என்னை அந்த அலுவலகத்தின் பின்புறம் இருந்த ஒரு கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கட்டிடத்தினுள் தங்களது வாழ்வின் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும், மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்தபோது அந்த கட்டிடத்தினுள்ளிருந்து ஒரு சகிக்க இ

ஆச்சி மசாலா உரிமையாளரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?..

ஆச்சி மசாலா உரிமையாளரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?.. 'ஆச்சி மசாலா ' ஏ. டி. பத்மசிங் ஐசக் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். பள்ளி ஓய்வு நாட்களிலே ஒரு பெட்டிக்கடையை நடத்தி அதன் மூலம் தனது கல்லூரி படிப்பை முடித்தவர். அவரது அம்மா 80 ரூபாய்க்கு பழைய சைக்கிள் ஒன்றை அவர்க்கு வாங்கி கொடுத்தார். அந்த சைக்கிளில் அவர் தினமும் 32கி. மீ. பயணம் செய்து கல்லூரிக்கு படிக்க சென்றார். படிப்பை முடித்தவுடன், அடுத்து வேலை தேடி சூட்கேசில் இரண்டு சட்டை துணிகளுடன் சென்னைக்கு வந்தார். Godrej நிறுவனத்தில் Salesman ஆக சேர்ந்தார். அப்பொழுதுதான் கிராமங்களில் ஹேர் டை விற்கும்படி இவருக்கு கொடுக்கப்பட்ட பெரிய சவால். முதலில் கடைக்காரர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. தனது புதிய யுக்தியுடன் காங்கேயம் மாட்டு சந்தைக்கு சென்று அங்குள்ள வயதான மாடுகள் சிலவற்றின் வாலுக்கு ஹேர் டை அடித்து காட்டியதும் மாடுகள் கூடுதல் விலைக்கு விற்றுப் போனது. மாடுகளின் உரிமையாளர்கள் வியந்து போய் தங்கள் நரைத்த மீசைகளுக்கு அந்த 'டை' யை போட்டி

விலையேறப்பெற்ற

விலையேறப்பெற்ற ..  God's part..  தேவனுடைய பகுதி.. 1. விலையேறப்பெற்ற தேவனுடைய அன்பு.. அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1 யோவான் 3:16 2. விலையேறப்பெற்ற  கிறிஸ்துவின் இரத்தம்.. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 1.19 3. விலையேறப்பெற்ற  மூலைக்கல்லாகிய கிறிஸ்து..  ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன், அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28.16 4. விலையேறப்பெற்ற  ஜீவனுள்ள கல்லாகிய கிறிஸ்து. . மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும். 1 பேதுரு 2.4 5. விலையேறப்பெற்ற ஞானமாகிய கிறிஸ்து.. ஓப்பீரின் தங்கமும், விலையேறப்ப

இன்னும் ...

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் இந்த நாளை .. ====================  நம்மிடம் ஆண்டவர் கேட்கிறார் ..  இன்னும்.. YET? 1. நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? மத்தேயு 15.16 2. இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி, உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா?இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? மாற்கு 8.17 3. இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு? இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். லூக்கா 18.22 4. இன்னும் ..  நித்திரை செய்யட்டும் என்பாயோ?_ இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடங்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? நீதிமொழிகள் 24.33 5. நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே? பாவத்திற

#ஜெபம் என்ற துப்பாக்கியில்...

#ஜெபம் என்ற துப்பாக்கியில்...       காவல்துறை உயரதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். அவர் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நன்றாக ஜெபித்த பின்னரே ஆரம்பிப்பது வழக்கம். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் பெரும்பாலும் ஜெபத்திலும் , வேதவாசிப்பிலும் நேரத்தை செலவிடுவார்..                 இதை சிறுபிராயம் முதலாகவே கண்டு வளர்ந்த அவரது மகனுக்கு மனதில் ஒரு சந்தேகம்  எழுந்தது . " அப்பாவைக் கண்டால்  ஊரே மதிக்கிறது . அவர் கட்டளையிட்டால் செய்து முடிக்க ஆயிரம் அதிகாரிகள் உண்டு . அவரைக்  கண்டு  பயப்படுகிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். _இப்படியெல்லாம் இருந்தும்  அவர் இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தொட்டதற்கெல்லாம் ஜெபிப்பது  அவரது தன்னம்பிக்கையின்மையக்  காட்டுவது போலில்லையா? அவரது பதவியும் , புத்திசாலித்தனமும்தானே  அவரது வெற்றிக்குப்  பின்புலமாய் அமைவது?" இந்தக் கேள்வி மனதுக்குள் இருந்தாலும் அவரிடம் நேரடியாகக் கேட்டதில்லை. அவனையும் அவர் நல்ல தேவபக்தியுடனும் , ஒழுக்கத்துடனுந்தான் வளர்த்திருந்தார். இருந்தாலும் தொடர்ந்து குவியும் வெற்றிகளும், செல்வச் செழிப்பும் , வாலிப வயதும் அ