ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.
குரங்கிடம் அப்பத்தை கொடுத்து அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நிறுத்தது.
அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது கடித்து விட்டு மீண்டூம் போட்டது.
இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.
அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.
ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம்
‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.
பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.
நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.
என் அன்பு வாசகரே,
நீங்கள் உங்கள் குடும்பத்திலும் , உங்கள் நண்பர்களிடத்திலும் ஒற்றுமையாக, ஒருமித்து வாழ வேண்டும் என்று நினைக்கும்போது தான் நீங்கள் அவர்களுக்கு விட்டுக்கொடுத்து வாழ முடியும். அவர்களைக் குறித்த ஒரு சிறு வேறுமாடு உங்கள் மனதில் வந்துவிட்டால் உங்களால் எதையும் விட்டுக் கொடுக்க முடியாது.
எனவே,
ஒற்றுமையாய் இருக்கும்படி வேறுபாடுகளை அகற்றிவிடுங்கள். நீங்கள் ஒருமித்து வாசம் பண்ணும் போது தேவனிடத்திலிருந்து எதெல்லாம் கிடைக்கும் என்று இந்த வசனங்களை பாருங்கள்.
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது, அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
சங்கீதம் 133:1-3
1⃣. எண்ணிலடங்கா நன்மைகள்,இன்பங்கள்..
2⃣. அபிஷேகத்தின் ஆசீர்வாதங்கள்..
3⃣. பனியாகிய வசனத்தின் ஆசீர்வாதங்கள்..
4⃣. என்றென்றும் ஆசீர்வாதம்..
5⃣. என்றென்றும் நல்ல வாழ்க்கை
ஆகியவைகளை கர்த்தர் தருகிறார்.
இது ஜெபத்தில் இருக்கும்போது தான் கிடைக்கும் சொல்லப்படவில்லை. உங்கள் சகோதர, சகோதரிகளோடும் உங்கள் நண்பர்களோடும், உங்கள் சபை மக்களோடும் ஒருமித்து வாழும் போது தேவனிடத்திலிருந்து வருதாகும் அப்படியானால் எவ்வளவு அதிகமாய் ஒருமித்து விட்டுக்கொடுத்து வாழவேண்டும் தேவன் விரும்புகிறார். என்று பாருங்கள்.
இதுவரைக்கும் உள்ள மனஸ்தாபங்கள், சண்டைகள், பேசாமல் திருப்பிக்கொண்டு இருப்பது ,அவதூறு பண்ணுவது , ஒரு விஷயத்தைக் குறித்து அதிகபடியாக கற்பனை பண்ணி குற்றம் சாட்.டுவது. தீமைக்கு தீமை செய்வது, நன்மைக்கு தீமை செய்வது போன்ற இழிவான செயல்கள் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் இப்போதே விட்டுவிட்டு அவர்களோடு உடனடியாக நல்மனம் பொருந்துங்கள்.
ஏனென்றால்
இயேசு எப்படி இருக்கிறாரோ அப்படி வாழவே நாம் அழைக்கப.பட்டிருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்
அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது. ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? 1 யோவான் 4:17,20
எனவே ஒருமனம், ஒற்றுமை, ஏகசிந்தை ஆகியவைகளோடு வாழ்ந்து பூனைகள் இழந்தது போல நாம் எதையும் இழந்து போக விடாமல் வாழ்வோம் அப்போது சங்கீதம் 133 - லிருக்கும் ஐந்து ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடி வரும் என்பது நிச்சயம் !!
Comments
Post a Comment