Skip to main content

கழுதையின் வருத்தமும் சிலுவையின் திருத்தமும்

*கழுதையின் வருத்தமும் சிலுவையின் திருத்தமும்*
     
இயேசுவைச் *சுமந்த* என்னைவிட
இயேசுவைக் *கொன்ற* உன்னை
புனிதமாக்கிவிட்டார்களே
என்று வருத்தப்பட்டது *கழுதை*

அதற்கு *சிலுவை* சொன்னது

அவருக்குக் கிடைத்த
        *வஸ்திர விரிப்பு*
உனக்கும் கிடைத்தது

அவருக்குக் கிடைத்த
         *முதன்மையான இடம்*
உனக்கும் கிடைத்தது

அவருக்குக் கிடைத்த
        *மதிப்பு, மரியாதை*
உனக்கும் கிடைத்தது
            ஆனால் நான்

என்னைச் *சுமந்தவரை*
           நானும் சுமந்தேன்
அவர் *விழும்போது*
           நானும் கீழே விழுந்தேன்
அவரை *அடித்தபோது*
            என்மீதும் விழுந்தது
அவரில் *ஆணிதுளைத்தபோது*
            என்னிலும் துளைத்தது
ஒதுக்கப்பட்டவனாய
           *ஓரத்தில்* கிடந்ததேன்
செதுக்கப்பட்டவனாய்
           *சிகரத்தில்* நின்றேன்
          அதனால்தான்
வெறுக்கப்பட்ட நான்   
     *விரும்பப்படலானேன்*
புறக்கணிக்கப்பட்ட நான்
       *புனிதமானேன்*
சபிக்கப்பட்ட நான்
         *சரித்திரமானேன்*
என்று திருத்தியது சிலுவை

தான் சொன்னதைக்குறித்து
            வருத்தப்பட்டு
மன்னிக்கணும் சிலுவையே
#பாடல்களை நான் சுகித்தேன்
         #பாடுகளையோ நீ சகித்தாய்
#ஆரவாரங்களை நான் சுகித்தேன்
         #பாரங்களையோ நீ சகித்தாய்
             அதற்கு சிலுவை
#வருத்தப்படாதே கழுதையே
நாம் இருவருமே
இயேசுவைச் சுமந்ததினால்
பாக்கியம் பெற்றவர்கள்.

          இயேசுவுக்கே
மகிமை உண்டாகட்டும்
              ....✍

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red