மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை (நீதிமொழிகள் 19:11)
.
கோபம் வருவது எல்லாருக்கும் இயற்கை. கோபப்படாத ஒரு மனிதனை பார்க்க முடியாது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை கோபம் எல்லாருக்கும் இயல்பே. ஆனால் அந்த கோபம் நம்மை துர்செய்கைகளை செய்ய வைப்பதற்கு முன் அதை அடக்க வேண்டும். அதுதான் மனித பண்பு.
.
சிலர் சொல்லுவார்கள் எனக்கு கோபம் வந்தால் கண்மண் தெரியாது. நான் நானாகவே இருக்க மாட்டேன் என்று. நீங்கள் நீங்களாக இல்லை என்றால் என்ன அர்த்தம், மனிதனாக இருக்க மாட்டேன், மிருகமாக மாறி விடுவேன் என்று தானே அர்த்தம். அப்படிப்பட்ட கோபத்தை நாம் கொள்ளக்கூடாது.
.
குற்றத்தை மன்னிப்பது மனிதனுக்கு மகிமை. கிறிஸ்தவமே மன்னிப்பதில்தான் இருக்கிறது. கர்த்தர் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை ஏற்றுக் கொண்டாரே! ஆனால் சிலருடைய வைராக்கியம் அவர்களை மற்றவர்களை மன்னிக்க விடாது. செத்தாலும் மன்னிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் உண்டு. நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் குற்றங்கள் உங்களுக்கு மன்னிக்கப்படமாட்டாது. வசனம் அப்படித்தான் சொல்கிறது.
.
கோபத்தை அடக்குவோம். நமக்கு எதிராக செய்யப்பட்ட குற்றங்களை மன்னிப்போம்! கிறிஸ்துவின் பாதையில் நடப்போம். ஆமென் அல்லேலூயா!
Comments
Post a Comment