Skip to main content

Story about God given peace in Tamil

**ஒரு பிச்சைக்காரர் இருந்தார்.
அவர் எப்போதும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம்  அமர்ந்திருப்பார்.
-வேறு எங்கும் போய் பிச்சை எடுக்க மாட்டார்.
-பசி எடுத்தால் மட்டுமே உணவு கேட்பார். 
 பணம் வாங்க மாட்டார்.

-அவரது நல்ல பண்பைப் பார்த்த
அந்த கிராமத்தினர்  தினமும்
அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க  ஏற்பாடு செய்திருந்தார்கள். 

_சில நாட்களில்  அதிகமான  உணவு வந்துவிட்டால்,  அதையும்  யாருக்காவது தானம் செய்து விடுவார்.

_எனவே அவரிடம் அந்த கிராமத்தினர்
நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

_ஒரு நாள் அவர் இறந்து விட்டார். 
ஊரே துக்கப் பட்டது.

_ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி
 ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

^^பிச்சைக்காரரின்
உடலை அவர் தங்கியிருந்த,
அவருக்குப் பிரியமான 
அதே இடத்திலேயே புதைத்துவிட முடிவு செய்தார்கள்.

^^அவர்  இருந்த இடத்திலேயே குழி தோண்ட ஆரம்பித்தார்கள்.  நாலாவது அடி தோண்டும்போது கடப்பாறை ஏதோ உலோகத்தில் மோதியது போல 'நங்' கென்று சத்தம் கேட்டது.

^^எல்லோரும்  வந்து எட்டிப் பார்த்தார்கள். 
அந்த  இடத்தில்
ஒரு பெரிய  பித்தளை அண்டா தென்பட்டது. 
உடனே தோண்டுவதை நிறுத்தி விட்டு  அண்டாவை வெளியே எடுத்தனர்.

^^திறந்து பார்த்தால், 
                 அவர்களுடைய  கண்களை  அவர்களாலேயே நம்ப முடியவில்லை. 

**ஆமாம்., 
              அண்டா முழுக்கத் தங்கமும்,
                            வைரமும் நிறைந்திருந்தது.

^^அந்தப்  புதையலின் மதிப்பு
அந்த கிராமத்தில் உள்ள  அனைவருமே பல  ஆண்டுகளுக்கு  உட்கார்ந்து  சாப்பிடும்  அளவிற்கு இருந்தது.

^^புதையல் ஊருக்குத் தேவையான
நல்ல காரியங்களைச் செய்யும்படி 
அந்த கிராமத்தின் தலைவரிடம்  ஒப்படைக்கப்பட்டது.
தலைவர் சொன்னார் ,

"தான் உட்கார்ந்திருந்த
இடத்திற்கு கீழே  இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா...,

**அந்த மனுஷன் பிச்சை எடுக்காம 
ஒரு மகாராஜா மாதிரி வாழ்ந்திருக்கலாம்.
கடைசி வரைக்கும், 
பாவம், பிச்சைக் காரனாவே வாழ்ந்து  செத்தார்...!"

^^பலரும் இப்படித்தானே  உயிர்ப்பிக்கிற வேதப் பொக்கிஷம் தங்கள்  அருகிலேயே இருப்பது தெரியாமல் நிம்மதிக்கும், சமாதானத்திற்கும் பிச்சைக்காரர்களாய் எங்கெங்கோ அலைகிறார்கள்.

^^இந்த நாளில் வேதத்தில் இருக்கிற பொக்கிஷங்களைக் கண்டு கொள்ளும்படி நம்முடைய கண்கள் திறக்கப்படும்படியாக ஜெபிப்போமா ?

"எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன், ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
 " சங்கீதம் 107 :43

Comments

Popular posts from this blog

Configure DB2 in IBM Rational Application Developer (RAD)

How to Configure DB2 in IBM Rational Application Developer (RAD)? Step: 1 Go to Data Source Explorer Step: 2 Right Click on   Database connection and click New Step: 3 Select   Db2 for Linux, UNIX and Windows from Select a database manager and enter appropriate details in Properties Step: 4 Click on  Test connection Step: 4 Click on  Finish

He Will quiet you with His Love, He will rejoice over you with singing!!!!

red