▪சி.சாம் ஜெஃப்ரி,
நண்பர்கள்
சிலருடன்
மகிழுந்தில்
பயணம்!
நீண்ட நேரம்
நெடுந்தூரம்...
நயமான பேச்சில்
நகர்ந்தது பயணம்!
இதமான
கால நிலை
பயணத்தைச்
சுகமாக்கிக்
கொண்டிருந்தது!
மெல்ல
மேகங்கள் திரள,
ஆங்காங்கே
மின்னல் கீற்றுகள்...
இடையிடையே இடி!
லேசாகத்
தூறத் தொடங்கியது!
மழைத் துளிகள்
முன் கண்ணாடியில்
விழத் தொடங்கின!
நான்கைந்து
துளிகள் விழுந்ததும்
கண்ணாடித் துடைப்பான்கள்
தானாக இயங்கத்
தொடங்கின!
துளி விழும்
வேகம், அடா்த்திக்குத்
தக்கவாறு சற்றும்
தாமதிக்காமல்
தானாகவே
துடைத்துத் தொடா்ந்து
சுத்தமாக்கின!
மழை நிற்கும்
வரை இது
தொடர்ந்தது!
எனக்கு
ஆச்சாியம்!
விசாாித்தேன்.
அது
தானியங்கி
என்றாா் நண்பர்!
சாதாரண
இயந்திரம்,
மழைத் துளி
விழுந்து
கண்ணாடி மங்கியதும்
சுத்தம் செய்யத்
தானாக விரைகிறது
என்றால்...
என்
வாழ்க்கையில்
பெய்யும்
சோதனை மழையைத்
துடைத்து என்னைத்
தெளிவாய் மகிழ்வாய்
இயங்க வைக்க
என் நேசா்
எவ்வளவாய் விரைவாா்?
வழியும் என்
விழித் துளி
துடைத்து என்னைத்
தேற்ற என் நேசா்
எவ்வளவாய் விரைவாா்?
பிரச்னைகளால்
மங்கலாகித்
தெளிவற்றுப் போன
என் வாழ்க்கையைத்
துடைத்து மாற்ற
என் நேசா்
எவ்வளவாய் விரைவாா்?
தானாகத்
துடைக்கும்
இயந்திரமே
பயணத்தை
எளிதாக்கும் போது,
எனக்காக உயிர்
கொடுத்த
என் நேசா்,
என் வாழ்க்கைப்
பயணத்தைத்
தாமாகவே வந்து
எளிதாக்கி ஆற்ற
எவ்வளவாய் விரைவாா்?
சிந்தித்துப் பாா்த்தேன்!
மழையென்ன...
புயலே வந்தாலும்
அஞ்சாமல்
பயணிக்க விரைகிறேன்...
எதுவாயினும்
என் கண்ணீா்
துடைத்து என்
பயணம் எளிதாக்க
என் நேசா்
என்னோடிருக்கிறாரே!
ஆக்கியோன்:- இயக்குநர், கூழாங்கற்கள் ஊழியங்கள் மற்றும் TELC போதகர், திருமங்கலம், மதுரை .
Comments
Post a Comment