“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.” – ஓசியா 8:12
இன்று நம்முடைய இல்லங்களில் இரண்டு மூன்று மொழிபெயர்ப்புகள் பல வண்ண அட்டைகளோடு அழகழகான வேதாகமங்களாக நம்முடைய வீட்டின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. ஆனால் முதன்முதலாக இந்த வேதாகமம் நம்முடைய கரங்களில் கிடைக்க எத்தனை பரிசுத்தவான்கள் கசையடிகள், நிந்தனைகள், பரிகாச சொற்கள், அவமானங்கள் பட்டார்கள். சிலர் இதற்காக இரத்த சாட்சியாக மரிக்கவும் ஒப்புக்கொடுத்தார்கள். அதில் மூல பாஷையான எபிரேயு, கிரேக்கு மொழிகளில் இருந்து முதன் முதலில் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர் வில்லியம் டிண்டேல் என்னும் பரிசுத்தவான்.
1494ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று அதன்பின் தனக்குப் பிடித்த இறையியலை படிக்க ஆரம்பித்தார். அப்பொழுது கிரேக்கம், எபிரேயம், லத்தீன் போன்ற மொழிகளில் மட்டுமே வேதாகமம் இருந்தது. ரோம கத்தோலிக்க ஆதிக்கத்தினால் போதகர்கள் கையில் மட்டுமே வேதாகமம் இருந்தது. சாதாரண மக்கள் வேதாகமத்தை வைத்திருக்கவோ வாசிக்கவோ முடியாது. வில்லியம் டிண்டேல்-க்கு எல்லாரும் வேதத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகியது. ஏற்கெனவே 8 பாஷைகள் தெரிந்த அவர் கிரேக்க மொழியையும் கற்றார். எப்படியாவது புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கி.பி. 1523 ல் லண்டன் பட்டணத்திற்கு சென்றார். அங்கும் யாரும் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. பின் ஜெர்மனி சென்று மார்டின் லூதருடன் தங்கியிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இங்கு ஒரு வருடத்தில் எபிரேய மொழியை பயின்று 1525 ல் ஜெர்மனியில் தன்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு அச்சிடப்பட்ட ஆங்கில வேதாகமத்தை இங்கிலாந்திற்குள் கள்ளத்தனமாக கொண்டுவந்தார். ஆனால் ஆங்கில வேதாகமம் வைத்திருப்பது தெரிந்ததும் வேதாகமங்கள் பறிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இவரை கைது செய்ய அரசனால் கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது ஐந்து வருடம் தலைமறைவானார். பின் தன் நண்பனால் காட்டிக்கொடுக்கப்பட்டு 500 நாட்கள் சிறைச்சாலையில் பல சித்ரவதைகளை அனுபவித்து, குரல்வளை நெரிக்கப்பட்டு, ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தீயிட்டு கொளுத்தப்பட்டார். அவர் மரிக்கும்போது “ஆண்டவரே இங்கிலாந்து மன்னனின் கண்களைத் திறந்தருளும்” என்பதுதான் அவருடைய கடைசி வார்த்தைகள். அதேபோல் 1838 ல் அதே எட்டாம் ஹென்றியால் ஆங்கில வேதாகமம் அரசாங்கத்தின் மூலமே வெளியிடப்பட்டது. அதன்பிறகுதான் ஒவ்வொரு பாஷையிலும் வேதாகமம் பல பாடுகள் பிரச்சனைகளுடே வெளியிடப்பட்டது.
நண்பரே! வேதாகமத்தை வீட்டில் வாங்கி அடுக்கி வைப்பதாலோ அழகு பார்ப்பதாலோ ஆசீர்வாதத்தை பெற முடியாது. எத்தனையோ அடைக்கப்பட்ட நாடுகளில் வேதாகமத்தை வைக்க சுதந்திரமில்லை. ஆண்டவர் நமக்கு கொடுத்துள்ள இந்த கிருபையின் நாட்களில் வேதத்தை இரவும் பகலும் பிரியமாய் தியானித்து மிகுந்த சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம்.
- Mrs. ஜெபக்கனி ஸ்டீபன்
How to Play Blackjack and Win - DRMCD
ReplyDeleteBlackjack is the 서귀포 출장마사지 easiest, and most rewarding way 이천 출장안마 to 동두천 출장안마 play blackjack. As a blackjack 강릉 출장샵 player, you're playing against 김제 출장안마 the dealer, or in the same room.