▪பொன்.வ.கலைதாசன்
நேரில் நேற்றெனைப் பார்த்தவன்
நீ யார் என்றெனைக் கேட்டனன்.
நானோர் நெடுங்கதை சொல்பவன் - அதன்
நாயகனோடும் நடப்பவன்.
கருப்பை ஒன்றில் இருந்தவன்,
வெறுப்பாய் வந்து பிறந்தவன்,
பொறுப்பே இன்றித் திரிந்தவன்,
நெருப்பே போன்று வாழ்ந்தவன்!
இறுக்கும் கயிற்றைப் போன்றவன்,
இருப்பைக் கூட மறந்தவன்,
இருக்கும் நோக்கம் தொலைத்தவன்,
இருட்டில் எங்கோ தொலைந்தவன்!
இழந்து போனவன், இழிமகன்,
இதயம் இல்லா கொடியவன்,
உளையாம் சேற்றினில் உழன்றவன்,
உலகே வெறுத்த கல்மனன்.
இருந்த போதிலும் இறைமகன்
இயேசுவின் பார்வையில் உயர்ந்தவன்.
குறுக்கையின் அன்பினைக் கண்டவன்,
கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவன்.
பாவக் கடலில் அமிழ்ந்தவன்
பரமனின் அருளால் எழுந்தவன்.
இரக்க மழையில் நனைந்தவன்
இறந்து மீண்டும் பிறந்தவன்!
Comments
Post a Comment