“...என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.” – வெளி. 2:13 நம் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மாவட்டம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திருநெல்வேலிதான். அப்பகுதியின் முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள் ஆவார். 18ம் நூற்றாண்டிலிருந்தே அப்பகுதியில் நற்செய்தி பரவ ஆரம்பித்தது. கிழக்கிந்திய வர்த்தகக் குழுவின் குருவான ஜேம்ஸ் ஹாப் அவர்கள் பாளையங்கோட்டையில் தங்கி ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவைகுண்டத்தின் அருகிலுள்ள திருபுளியங்குடி (TPகுடி) யிலுள்ள நம்பி என்ற விவசாயியின் மூன்று பிள்ளைகளில் இளையவன் சுப்பிரமணி வேலை நிமித்தமாக ஸ்ரீவை போகும்போது தெருப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஒரு உபதேசியார். பிரசங்கம் முழுவதையும் கேட்டு விட்டு ஒரு நற்செய்தி நூலையும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்து தாயாரிடம் நாம் வணங்கும் தெய்வமெல்லாம் நம்மிடம் "அது, இது" என கேட்கிறது. ஆனால் இந்த தெய்வமோ உயிரையே நமக்காக கொடுத்திருக்கிறார். "சொர்க்கம் செல்ல ஒரே வழி இயேசுகிறிஸ்துதானாம்" என்றான். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கையிலுள்ள யோவான் சுவிசேஷத்தை வாசித்து வீட்டிலுள்ளவர...