இஸ்ரவேலரை கடவுள் சிறப்பாக நேசித்த காரணம் என்ன?
பைபிளை நாம் வாசிக்கும் போது ஆங்காங்கே கடவுள் இஸ்ரவேலர்களை தன்னுடைய சிறப்பான மக்களாக குறிப்பிடுவதை காணமுடியும்.
_ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார், "இஸ்ரயேல் என் மகன்; என் தலைப்பிள்ளை" (விடுதலைப் பயணம் 4:22)_
_நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! (எசாயா 41:8)_
_என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு (எசாயா 44:1)_
முழு உலகத்துக்கும் பொதுவான தெய்வம் ஒரு இனக்குழுவிடம் ஏன் தனி அன்பு காட்டவேண்டும்?
முதன்முதலில் இஸ்ரயேலர்கள் என்பவர்கள் யார் என்று அறிவோம். மெசொப்பொத்தாமியா என்னும் நாட்டிலே ஆபிராம் என்னும் மனிதர் ஒருவர் வாழ்ந்துவந்தார். ஆபிராமும் அவரோடு இருந்தவர்களும் எபிரேய மொழி பேசியதால் அவர்கள் *'எபிரேயர்கள்'* என்று அழைக்கப்பட்டனர். ஒருநாள் கடவுள் ஆபிராமுக்கு தரிசனமாகி, _"உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, *நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்"* என்றார். *ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்* (தொடக்கநூல் 12:2-4)._ அப்போது ஆபிராமுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. ஆனாலும் கடவுள், "சொன்ன வாக்குறுதிகளை நம்பி, அவர் சொன்ன தேசத்துக்கு போனார். எனவே, 'பெருங்கூட்ட மக்களுக்கு தந்தை' என்னும் பொருள்படும் *ஆபிரகாம்* என்ற பெயரை கடவுள் ஆபிராமுக்கு சூட்டினார் (தொடக்கநூல் 17:5).
அவருக்கு கடவுள் உறுதிமொழி சொன்னதுபோலவே ஆபிரகாம் தன் மனைவி சாராள் மூலமாக ஈசாக்கு என்னும் மகனை பெற்றெடுக்க கடவுள் அருள் பாலித்தார். ஈசாக்குக்கு யாக்கோபு, ஏசா என்னும் மகன்களை கடவுள் கொடுத்தார். ஏசா தவறான ஆன்மீகத்தை பின்பற்றி மெய்க்கடவுள் வணக்கத்திலிருந்து விலகினார். அவருடைய சந்ததிக்கு *ஏதோமியர்கள்* என்று பெயர். யாக்கோபு கடவுள்மீது வைத்திருந்த முரட்டு நம்பிக்கையின் பொருட்டு கடவுள் அவருக்கு *இஸ்ரயேல்* என்னும் பெயரை சூட்டினார் (தொடக்கநூல் 32:28). இஸ்ரவேலுக்கு 12 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் *இஸ்ரவேலர்கள்* என்று அழைக்கப்பட்டனர்.
ஆக, ஆபிரகாம் கடவுளுக்கு முழுமனதோடு கீழ்படிந்ததால்தான் அவருடைய சந்ததிகளை கடவுள் சிறப்பாக நேசித்தார்.
ஒரு தகப்பன் தன் வார்த்தைக்கு கீழ்படியாத பிள்ளைகளுக்கு காட்டும் அன்பைவிட தன் வார்த்தைக்கு கீழ்படியும் பிள்ளைக்கு அதிக அன்புகாட்டுவது இயல்புதானே! அதுதானே நீதி.
_ஆபிராமைத் தேர்ந்தேடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே! உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர்! கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர்! *நீர் நீதி உள்ளவர்! எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்!* (நெகேமியா 9:8)_ என்று பக்தன் கூறுகிறான்.
_நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்களினங்களிலும் *என் தனிச் சொத்தாவீர்கள்* (விடுதலைப் பயணம் 19:5)_என்று கடவுள் கூறுவதும் அதனால்தான்.
_உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் *ஓர வஞ்சனை செய்வதில்லை;* கையூட்டு வாங்குவதும் இல்லை (இணைச் சட்டம் 10:17)_ என்று இறைத்தூதர் மோசே சொல்கிறாரே!
_கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள் (உரோமையர் 3:29)_ என்று பவுல் தெளிவுபடுத்துகிறாரே!
_தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் *எவரும்* அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16)_ என்று இயேசு கிறிஸ்து கூறினாரே!
_கடவுள் *ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை* (ரோமர் 2:11)_ என்றெல்லாம் வேதம் கூறுகிறதே!
இஸ்ரவேல் மக்களை கடவுள் சிறப்பாக நேசித்த காரணம் என்ன? அதை ஆண்டவரே சொல்வதை கவனியுங்கள்.
_உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார். எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே? மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், *உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும்,* ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார் (இணைச் சட்டம் 7:6-8) என்று கடவுள் தெளிவுபடுத்துகிறார். அதாவது இஸ்ராயேலர்களுடைய மூதாதையருக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக அப்படி நேசித்தார் என்று அறிகிறோம். யார் மூதாதையர்கள்? என்ன வாக்குறுதி? என்பவற்றை அறிய கீழ்க்காணும் இறைவார்த்தைகளை கவனமாக வாசியுங்கள்.
_கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என அழைக்க, அவரும் "இதோ! அடியேன்" என்றார். அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார். பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, "அப்பா!" என அழைக்க, அவர், "என்ன மகனே!" என்று கேட்டார். அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன். ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார் (தொடக்கநூல் 22:18)_
ஆபிரகாமின் இறை நம்பிக்கையை மதித்து அவருக்கு மட்டும்தானே கடவுள் ஆசீர்வதிக்கவேண்டும்; அவருடைய சந்ததிகளை கடவுள் ஏன் ஆசீர்வதிக்கவேண்டும்? என்று கேள்வி கேட்போர் உண்டு. இறக்கும்போது நாம் விட்டுச்செல்லும் சொத்துக்களையும், செல்வங்களையும் நம் பிள்ளைகளுக்குத்தானே கொடுத்துச் செல்கிறோம். அதன் காரணம் என்ன? நாம் நம் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்புதான் அதன் காரணம். இவ்வுலகில் பிள்ளைகளை பெற்ற எல்லாருமே தங்களைவிட தங்கள் பிள்ளைகளைத் தானே அதிகமாக நேசிக்கிறார்கள்! அதேபோலத்தான் நன்மை செய்பவர்களின் 1000 தலைமுறைகளுக்கு கடவுள் அருள் பாலிக்கிறார். தீமை செய்பவர்களின் மூன்றிலிருந்து நான்கு தலைமுறை வரை தண்டிக்கிறார் (விடுதலை பயணம் 20:5-6). அப்படிதான் ஆபிரகாம் கடவுளுக்கு கீழ்படிந்ததால், அவருடைய தலைமுறைகளை ஆசீர்வதித்தார்.
ஒருமுறை ஈசாக்கின் தேசத்தில் பஞ்சம் வந்தபோது, _"நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன். உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர். ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்" என்றார் (தொடக்கநூல் 26:3-5)_
_அன்றிரவு ஆண்டவர் ஈசாக்குக்கு தோன்றி, "உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்" என்றார் (தொடக்கநூல் 26:24)_
ஆனால், அதே இஸ்ரயேல் மக்கள் பாவம்செய்யும்போது, கடவுள் தண்டனை கொடுப்பதிலும் முக்கியத்துவம் அவர்களுக்கு கொடுத்தார்.
_உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்; ஆதலால், *உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்* (ஆமோஸ் 3:2)_
கோத்திர பிரிவுகள்
இஸ்ரவேலின் அந்த 12 பிள்ளைகளுடைய *குணாதிசயங்களை அடிப்படையாக வைத்து இஸ்ரயேல் தன் பிள்ளைகளை ஆசீர்வதித்தார் (தொடக்கநூல் 49).* அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப சொத்தின் அளவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 12 பிள்ளைகளும் 12 கோத்திரங்களாக பிரிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கோத்திர மக்களும் தங்கள் தங்கள் பூர்வபிதாக்களின் பண்பாட்டு தரத்தின்படி ஆசீர்வதிக்கப்பட்டனர். அவர்கள் திருமணம் செய்யும்போதுகூட தந்தையின் ஆசீர்வாதம் தன் பிள்ளைகளுக்கே வந்துசேரவேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தங்கள் கோத்திரங்களுக்குள்ளேயே திருமணம் செய்துள்ளனர்.
_ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. "தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்; ஆனால் தங்கள் தந்தையின் குலக் குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்க வேண்டும். இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது; இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும் (எண்ணிக்கை 36:6-7)_
பரிசுத்தமாக வாழ்வோரின் சந்ததிகளுக்கு வரும் ஆசீர்வாதத்தையும், துன்மார்க்கர்களின் சந்ததிகளுக்கு வரும் சாபத்தையும் இஸ்ரவேல் மக்களுக்கு விளங்கப்பண்ணவும்,
தலைமுறை ஆசீர்வாதங்களானாலும், சாபங்களானாலும் அந்த கோத்திரத்துக்குள்ளேயே தங்க வைப்பதற்காகவே கடவுள் இந்த ஏற்பாட்டை செய்திருக்கவேண்டும் என்று நான் அவதானிக்கிறேன். ஆனால், இயேசு கிறிஸ்துவின் மரணத்தின்மூலமாக பாவங்களும், அவற்றால் உருவான சாபங்களும் முறியடிக்கப்பட்டதால் புதிய உடன்படிக்கையில் கோத்திரங்கள், வம்சங்கள் என்னும் முறைமைகள் அகன்று விடுதலை அடைந்து விட்டோம். அகில உலக சபையை ஒரே தந்தையின் குடும்பமாக கருதுகிறோம்.

Comments
Post a Comment