https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=60611&ncat=7
இயற்கை முறையில், குடற்புழு நீக்கம் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவிப் பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் கூறியதாவது:
அக ஒட்டுண்ணிகள் என அழைக்கப்படும் குடற்புழுக்கள் இளங்கன்றுகளை தாக்கும்.குறிப்பாக, 'ஆம்பிஸ்டோமியாஸிஸ்' என்னும் நோயால் புழுக்கள் வளர்ந்து, சிறு குடலை சேதப்படுத்தும்.இதுபோன்ற நேரங்களில், போதி மற்றும் உடற்சோர்வு ஏற்படும். கீழ்தாடை வீக்கம் ஏற்படுத்தும்.
இதுதவிர, கறவை மாடுகளுக்கு 'சிஸ்டஸோமியாஸிஸ்' என்கிற நோயால், மாடு மூக்கிற்குள் சதை வளர்ந்து, மாடு மூச்சு விட சிரமம்படுவதோடு, இறக்கவும் நேரிடும்.இதை கட்டுப் படுத்துவதற்கு, மூலிகை மருத்துவத்தில் கட்டுப்படுத்தலாம்.
உதாரணமாக, 15 கிராம் சீரகம்; 10 கிராம் மஞ்சள்; 5 பூண்டு பல்; 5 மிளகு; ஒரு கை பிடி தும்பை இலை; ஒரு கைபிடி வேப்பிலை; 100 கிராம் வாழை தண்டு சாறு; 50 கிராம் பாகற்காய்; 150 கிராம் பனை வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில், சீரகம், கடுகு, மிளகு, பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, உப்புடன் தொட்டு, நாக்கின் மீது தேய்க்க வேண்டும். ஒரு வேளை வயிற்றுக்குள் உணவாக கொடுக்க வேண்டும். இதுபோல செய்தால், குடற்புழு நீக்கம் எளிதாக கட்டுப்படுத்தலாம். நோய் தாக்கம் அதிகமாக இருந்தால், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரை நாடலாம்.இவ்வாறு அவர் கூறினார்
Comments
Post a Comment